141
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சிக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் கட்சியொன்றுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் பரிந்துரைகளின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகள் பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love