159
இலங்கையில் எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசர கால நிலமையை பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
10 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடனம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love