சினிமா பிரதான செய்திகள்

மணிரத்னம் குறித்த ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ள சுஹாசினி

சென்னையில் நடைபெற்ற சரிகம வழங்க யூட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள அபியும் அனுவும் என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய சுஹாசினி, மணிரத்னம் குறித்த ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அபியும் அனுவும் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் டொவினோ தோமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ள நிலையில் தரண் இசையமைத்துள்ளார். அத்துடன் இந்தப் படத்தினை பி ஆர் விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார்.

இந்தநிலையில் சுஹாசினி பேசும் போது, மணிரத்னம் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனரான பி ஆர் விஜயலட்சுமியின் அண்ணன் ரவி பந்துலுவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.