344
1991ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் நடிக்கத் தொடங்கிய அரவிந்சாமி சினிமாவில் 27 வருடங்களாக பயணித்து வரும் நிலையில் அவரது புதிய படமான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பரதன் பிலிம்ஸ் எதிர்வரும் மார்ச் 29 முதல் வெளியிட உள்ளது.
ரஜனிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி படத்தில் துணைப் பாத்திரமாக நடித்த அரவிந்சாமி ,1992ஆம் ஆண்டில் ரோஜா படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1995இல் பம்பாய் படத்தில் நடித்து பெரும் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார்.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்க இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன், மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.
அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். சண்டை மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்ஷினி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பரதன் பிலிம்ஸ் நிறுவனம் எதிர் வரும் மார்ச் 29ஆம் திகதி வெளியிடுகின்றது.
Spread the love