181
ரஸ்ய ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 26 பேர் பயணிகள் எனவும் 6 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள விமான தளத்தில், விமானம் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குறித்த விமானம் தாக்குலுக்குள்ளாகி விழவில்லை எனவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது
Spread the love