இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிதாகஸ் முக்கோண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகள் போட்டியிட்டியிட்ட இன்றைய முதலாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்ததது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து போட்டியில் வெற்றியீட்டிள்ளது. ஆட்ட நாயகனுக்கான விருது குசல் பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Sri Lanka’s Kusal Perera plays a shot during their Twenty20 cricket match against India in Nidahas Triangular series in Colombo, Sri Lanka, Tuesday, March 6, 2018. (AP Photo/Eranga Jayawardena)