161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களில் குரோத உணர்வைத் தூண்டும் நபர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். குரோத உணர்வைத் தூண்டும் சகல விதமான பதிவுகளும் கண்காணிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love