குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் முகநூல் பாவனைக்கு சகல வலையமைப்புக்கள் ஊடாகவும் செல்லமுடியாத நிலைமை காணப்படுகின்றது. கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைமையினால் அந்நிலைமை ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை , சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்புதல் , இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல் , பரப்புதல் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத கருத்துகள் போலி கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக அவசர கால சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை கண்டி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் ஊடான இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது