அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகரான ஹரி கோன் ( Gary Cohn) இன்றையதினம் பதவி விலகியுள்ளார். 57 வயதான ஹரி கோன் , டிரம்ப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வெள்ளை மாளிகையின் பொருளாதார கவுன்சில் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஹரி கோன் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிவிலகலுக்கான உண்மையான காரணம் எவையும் தெரிவிக்கப்படாத போதும் வர்த்தக கொள்கை தொடர்பாக டிரம்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே அவா பதவிவிலகுவதற்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பதவிவிலகல் குறித்து ஹரி கோன் வெளியிட்ட அறிக்கையில், தனது நாட்டிற்காக பணிபுரிந்தது பெருமையாக உள்ளது எனவும் எனது பொருளாதார கொள்கைகள் மூலம் அமெரிக்க மக்கள் பயனடைந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஹரி கோன் மிகச்சிறந்த ஆலோசகர் எனவும் அவரின் பணி அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமைந்தது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.