இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தெங்குனோபால் மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், இரு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தக் குண்டு வெடிப்பால் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை கிளர்ச்சியாளர்கள் வைத்திருக்கலாம் என மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கம்ஜோங் மற்றும் இம்பால் பகுதிகளிலும் நேற்று இரவு வெடிகுண்டு வெடித்திருந்த போதும் இந்த குண்டுவெடிப்பில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மணிப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.