குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
de Kock
தென் ஆபிரிக்க அணியின் விக்கட் காப்பாளர் குயின்டன் டி கொக்கின் மேன்முறையீட்டை சர்வதேச கிரிக்கட் பேரவை நிராகரித்துள்ளது. ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து டி கொக்கிற்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரவை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை குறைக்குமாறு கோரி டி கொக் மேன்முறையீடு செய்திருந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது இவ்வாறு ஒழுக்க விதிகளை மீறியதாக டி கொக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 25 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுக்க விதி மீறல் குறித்த புள்ளிகளில் ஒரு பாதக புள்ளியையும் டி கொக் பெற்றுக்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னருக்கும், டி கொக்கிற்கும் இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
David Warner’s