குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மிசிசிப்பியில் கருக்கலைப்பு குறித்த சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 வாரங்களுக்கு பின்னரான கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி மாநில செனட் சபை இது தொடர்பிலான சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவையில் இரண்டாம் தடவையும் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த யோசனை சட்டமாக அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைப்பதற்கு தற்பொழுது மிசிசிப்பியில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ காரணிகளுக்காக மட்டுமே 20 வாரங்களின் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்கப்படுகின்றது. எனினும், இந்த சட்டமூலம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என மாநிலத்தில் ஒரேயொரு கருக்கலைப்பு சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டியானி டெரிஸீஸ் தெரிவித்துள்ளார்.