Home இந்தியா காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை

காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை

by admin


காதல் ஜோடியைக் கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு குறித்த காதல் ஜோடியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதும், ஆண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அத்துடன் பெண் அணிந்திருந்த நகைகளையும் திருடியிருந்தார்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியான 29 வயதான திவாகரன் என்பவர்தான் காதல் ஜோடியைக் கொலை செய்தமை தெரியவந்ததனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை விசாரணை 2012-ம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் பாலியல் பலாத்காரம், இரட்டைக் கொலை, திருட்டு ஆகிய குற்றங்களுக்காக திவாகரனுக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது இதனையடுத்து திவாகரன் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More