குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். நாட்டில் மீளவும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு தமது கட்சி அரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்க ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஏதேனும் உதவியை கோரினால் அதனை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் மக்களுடன் பேசுமாறு அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையே தற்போதைய நிலைமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலுத்கம, ரத்துபஸ்வல உள்ளிட்ட தமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களின் மீதும் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், எனினும் தற்பொது இடம்பெறும் தவறுகள் தொடர்பில் அரசாங்கம் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.