171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்பொழுது மாலை 6.00 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love