163
இண்டியன்வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றுப் போட்டியில் மரிய ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் இண்டியன்வேல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஸ்யாவின் மரிய ஷரபோவா 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நவ்மி ஒசாகாவிடம் தோல்வியடைந்துள்ளார்.
இந்தப் போட்டியின் ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றின் 2-வது சுற்றில் வெற்றியீட்டியுள்ள இந்திய வீரர் யுகி பாம்ப்ரி பிரான்சின் நிகோலஸ் மகுத்துடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love