187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலியின் பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் அஸ்ட்டோரி (Davide Astori ) 31ம் வயதில் திடீரென மரணித்திருந்தார். அவரது மரணத்திற்கு ஆயிரக் கணக்கான ரசிகர்களு; அஞ்சலி செலுத்தியுள்ளனர். இத்தாலியின் ஏ தர கழகமான பியோரின்டினா கழகத்தின் தலைவராகவும் அஸ்;ட்டோரி திகழ்ந்திருந்தார். இத்தாலியின் தேசிய அணித் தலைவர் கியான்லுகி புபோன் உள்ளிட்டவர்கள் இறுதிக் கிரியைகளில் பங்கேற்றிருந்தனர்.
பியோரின்டினா கழகம் 13ம் இலக்க கால்பந்தாட்ட அங்கியை இனி பயன்படுத்தாது என அறிவித்துள்ளது. அஸ்ட்டோரிக்கு வழங்கும் ஓர் கௌரவமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love