Home இலங்கை இணைய தளங்களை தடை செய்வதில் பயனில்லை – நாமல் ராஜபக்ஸ

இணைய தளங்களை தடை செய்வதில் பயனில்லை – நாமல் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இணைய தளங்களை தடை செய்வதில் பயனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இணையதளங்கள், சமூக ஊடக வலையமைப்புக்களை தடை செய்வதன் மூலம் இனப் பிரச்சினைக்கு எந்த வகையிலும் தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு உயர் நீதிமன்றிற்கு சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரங்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு சமூக ஊடக வலையமைப்புக்கள் தடை செய்யப்பட்ட போதிலும் அதில் பெரிய பயன் கிடையாது என தெரிவித்துள்ளார். தடைகளை மீறி இணையத்தைப் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அவர் 2015ம் ஆண்டில் இந்தியாவும் இது போன்றதொரு முயற்சியை எடுத்த போதிலும் அதில் எவ்வித பயனும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More