குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தாம் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தனிப்பட்ட ரீதியில் ஆற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் மாநாயக்க தேரர்கள், அனுநாயக்கத் தேரர்கள், மௌவிகள், இந்து மத குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களுடன் கண்டியில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்து இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துரையாடியிருந்தார். இது தொடர்பிலேயே அவர் இஅவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தாம் இவ்வாறு சந்திப்பு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தாம் ஓர் மத்தியஸ்தராக கடமையாற்றி வருவதாகவும் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் காவல்துறையினர் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.