12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு ராஜஸ்தான் சட்டமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்றையதினம் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த புதிய சட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் அரியானாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்நு கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களும் இந்த சட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகள் இ;டம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்யும் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 14 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.