148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கைக்கு பூரண அதரவளிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரால் கட்சுரோசி கவானா ( Katsuthoshi Kawana) இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினருக்கு கூடுதல் பயிற்சி சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை அட்மிரால் கட்சுரோசி கவானா ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love