குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் 25 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புபட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தரித்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியதாக 23 ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு ஊடகவியலாளர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய 50, 000 பேர் கைது செய்யப்பட்டதுடன், 150,000 பேரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது