168
புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஊஞ்சல் கட்டு, நெடுங்கேனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து உள்ளூர் துப்பாக்கி இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love