நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ரஞ்சித்துடன் சூர்யா இந்த ஆண்டு இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்டகத்தி படத்தை வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே ரஞ்சித்துக்கு கார்த்தியை இயக்கும் வாய்ப்பு வழங்கியருந்தது. சிறய இடைவெளியின் பின்னர் கார்த்திக்கு அந்தப்படம ஹிட்டாக அமைந்திருந்தது.
அதன் பிறகு சூர்யாவை இயக்க பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் ரஜினியிடமிருந்து அழைப்பு வரவே கபாலி படத்தினை இயக்கும் வேலையில் இருந்தமையினால் அது தள்ளிப் போனது.
கபாலிக்கு பின்னரும் சூர்யா ரஞ்சித் கூட்டணி இணையவிருந்த போதும் மீண்டும் ரஜினியே அழைத்து காலா படத்தினை இயக்க வாய்ப்பு வழங்கியமையினால் அது பிற்போடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த முறை ரஞ்சித்தை மிஸ் பண்ணிடவே கூடாது என சூர்யா உறுதியாக இருக்கிறாராம் . நேற்று முன் தினம் நடந்த ஞானவேல்ராஜாவின் நோட்டா செய்தியாளர் மகாநாட்டில் பா.ரஞ்சித் கலந்துகொண்ட போது சூர்யா – ரஞ்சித் – ஞானவேல்ராஜா கூட்டணி உறுதியாகி விட்டதாகவே தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது