“ராஜீவ் காந்தி கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம்”
“ராஜீவ் காந்தி கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம்” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா என மாணவர் கேள்வி எழுப்பியமைக்கு பதிலளித்த அவர் தனது தந்தை மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி வேதன அடைந்ததுடன் பல ஆண்டுகளாக கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம் எனவும் ஆனால் தற்போது எப்படியோ கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது இரு விஷயங்களை நினைத்ததாகவும் அதில் ஓன்று இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர் என்பது எனவும் மற்றையது பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வன்முறையை தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.