2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து தனது சகோதரர்களான மகிந்த ராஜபக்ஸவுடனோ பசில் ராஜபக்ஸவுடனோ இதுவரையில் கலந்தாலோசிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதல் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் தான் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தாலும் அது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் கால அவகாசம் இருக்கிறது என்பதனால் அது குறித்து தற்போது பேசுவது முற்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்குமென தான் நினைப்பதாகவும் குறித்த கட்சியின் மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ,நாட்டின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள், தமது ஜனாதிபதி வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் தெரிவு செய்வார்கள் எனவும் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.