குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ருவன்டாவில் இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதலில் 16 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ருவன்டாவின் தென் மாவட்டமான நாயாறகுறுவில் அமைந்துள்ள ஏழாம் திருச்சை தேவாலயமொன்றில் குழுமியிருந்த பக்தர்களே இவ்வாறு இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். தேவாலயத்தின் மீது இடி மின்னல் தாக்குதல் நடத்தப்பட்ட உடனுமே 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 140 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவன்டாவில் கட்டிட நிர்மாண நியமங்களை பின்பற்றாத 700 தேவாலயங்கள் மூடப்பட்டு ஒரு வாரத்திற்குள் இந்த பாரிய மின்னல் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது