அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது இதுகுறித்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சவுத் மிலிட்டரி மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும் எம்ஐஜி 31 சூப்பர்சானிக் இடைமறிப்பு விமானத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி வெற்றிகரமாக இலக்கை தாக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரஸ்யாவில் எதிர்வரும் 18-ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், புதிய அணு ஆயுதங்களை ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த கின்ஜால் ஏவுகணை. இது அணு ஆயுதங்களை சுமந்தபடி 10 மடங்கு வேகத்தில் 2 ஆயிரம் கி.மீ.தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது