குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒட்டு மொத்த உலகமும் சிங்கள இனத்தின் மீது குற்றம் சுமத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலரின் நாச வேலைகளினால் ஒட்டுமொத்த உலகமும் சிங்கள இனத்தின் மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் இந்த சம்பவங்களினால் உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெறும் பிரச்சினைகளுடன் ஒப்பீடு செய்யும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
இந்த நிலைமையானது தெற்காசியாவில் வாழ்ந்து வரும் ஏனைய பௌத்தர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்த அழிவுகள் குறித்து உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பை அடுத்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கண்டி நோக்கியே செல்கின்றனர் என்பதுடன், அதிகளவான அரேபியர்கள் கண்டிக்கு சுற்றுலாப் பயணம் செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ள பிரதமர் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தால் அது மக்களின் வருமானத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
Yes this is the true context. Well said PM.