குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகநூல் கும்பல் ஒன்றே கண்டியில் வன்முறைகளைத் தூண்டியது என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். கண்டியில் பிரச்சினைகளை ஏற்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முகநூல் கும்பல் ஒன்றினால் இந்த வன்முறைத் தூண்டியதாக கூறினால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனினும் இதுவே உண்மையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் முழு இலங்கையுமே பரவியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய மருந்து வகை என கூறப்பட்ட பொருள் என்னவென்பதை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.