குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களுது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று(12) கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றார்கள் என்றும் வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் அனைத்து விடயங்களையும் தங்களுடைய பிரதிநிதகள் எடுத்துரைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்
சிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
1 comment
Why he haven’t go to Geneva at this crucial gesture. In fact that lady minister Anathey and Clown Sivajilingam all those guys may spoil the soup over there in such UN international arena. Where as this is his the former Judge C.V Mama’s platform by his expertice knowledge in legal matters as well legislature of Sri Lankan frame work matters would be discussed in that platform over there. His work load over here in northern Sri Lankan land itself is futile like bull shit reson in my view. He just escaping put those our half baked ill knowledgeable guys to be fooled there in this International arena at large. May God bless mother Sri lanka.