குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக பயன்பாட்டு தடைக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் கோரியுள்ளது. தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தரணிகள் ஒன்றியம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அடிப்படை உரிமை மீறப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 3ம் சரத்தின் 14(1)(அ) பிரிவின் அடிப்படையில் தொடர்பாடல் வழிமுறைகளை முடக்கியமை, மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடக வலையமைப்புக்களை முடக்கிய இலங்கைத் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையக அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 comment
At last it’s comes in legal framework.