குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12 ஆம் திகதி அதிகாலை மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றநிலையில் காணாமல் போயிருந்தனர்.
சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா, 48 வயதுடைய இமானுவேல் மிரண்டா, 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா என்ற மூவருமே இவ்வாறு காணமல் போயிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபபட்டுள்ளது. தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்ற போதும் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்ப்படைக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை
Mar 13, 2018 @ 02:52
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.நாட்டின் அநேகமான பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.