167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து டெஸ்ட் போட்டியொன்றில் மோத உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் மோதல் சம்பவமொன்றில் ஈடுபட்டமை குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளமையால் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 6ம் திகதி பிரிஸ்டல் க்ரவுன் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Spread the love