173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சாவகச்சேரி பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் சி – 4 வெடிமருந்துகள் மீட்கப்பட்டு உள்ளது. சாவகச்சேரி டச்சு வீதியில் மருதடி பகுதியில் குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தினை அகழ்ந்த போதே அவை மீட்கப்பட்டன. அது தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் அவற்றை மீட்டு சென்றனர்.
Spread the love