173
சாட்சியமற்ற வன்முறை , சாட்சியமற்ற யுத்தம் என சிறுபான்மை இனங்களுக்கு எதிரகக, இலங்கை போரினவாத அரசு கால காலமாய் செய்துவரும் அடக்கு முறைகளை, இன அழிப்பை வெளியுலகத்துக்கு தெரியாமல் இருக்க செய்யும் யுக்தியே சமுக தொடர்பாடல் வலைகளுக்கன தடை என்று கூறுகிறார் இயக்குனர் ரஞ்சித் யோசேப்.
அண்மையில் இலங்கையின் கண்டிப் பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகளை முகநூல் கும்பல் ஒன்றே ஏற்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறுகிறது. இந்த நிலையில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முடக்குவதால் இனவாத வன்முறைகளை ஒடுக்கிவிட முடியுமா என்றும் விவாதம் தொடங்கியுள்ளது.
தற்காலத்தில் உலக வாழ்வியலில் ஒரு அங்கம் ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களை தடைசெய்வதனால் பல்வேறு தொடர்பாலடல் தடைகள் ஏற்படுகின்றன. அத்துடன் கல்வி, கலை, பொருளாதாரம், இதழியல் என பலதுறைகளையும் இது பாதிக்கச் செய்யும். இலங்கை அரசு சமூக வலைத்தளங்களை முடக்குவது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அவப் பெயரை ஈட்டித்தரும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவும் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதகம் பற்றி கருத்து தெரிவித்துள்ளது.
இதேவேளை அன்று ஊடக சுதந்திரத்தை பறித்தவர்கள், இன்று ஊடகங்களேடு, சமுக வலைத்தளங்களின் தொடர்பாடலையும் சேர்த்து பறிக்கின்றார்கள். இதன்மூலம் சிறுபான்மை இனம் இனைந்து செயற்பட்டு தம்மை தற்காத்து கொள்முடியாமால் போகின்றது என்றும் சினம்கொள் திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் யோசப் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின் ஆணிவேர் சிங்கள பெளத்த பேரினவாதம்தான். அவர்கள் இணைய வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு வன்முறையை வளர்க்கிறார்கள் என்றால், அவ்வாறு செய்பவர்களின்மீதே கடும் நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று கூறுகிறார் தமிழகத்தை சேர்ந்த இதழியலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான ஆழி செந்தில்நாதன்.
முகநூல் போன்ற வசதிகளைத் தடைசெய்வது என்பது முட்டாள் தனமானது மட்டுமல்ல ஏமாற்றுத்தனமானதும்கூட என்று கூறியுள்ள அவர் எல்லா சர்வாதிகார அரசுகளுமே இவ்வாறான வேலைகளையே செய்கின்றன. இலங்கை அரசும் விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தார்.
தொகுப்பு- குளோபல் தமிழ் விசே செய்தியாளர்
Spread the love