220
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்துள்ளதாகவும் விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஊயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love