151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் முன் வரிசை ஆசனத்தில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் அமர்ந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போதும் ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி பங்கேற்ற கேள்வி பதில் நிகழ்விலும் ஞானசார தேரர் பங்கேற்றுள்ளார்.
ஜப்பானில் உள்ள விஹாரைகளின் மாநாயக்க தேரர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஞானசார தேரரும் பங்கேற்றிருந்தார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Spread the love