158
தான் நடித்த ‘அசுரவதம்’. படத்தை வெளியிட நடிகர் விஜய் சேதுபதியையை அழைத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான சசிக்குமார். ‘கொடிவீரன்’ படத்திற்கு பின்னர் மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமே அசுரவதம்.
எம்.மருதுபாண்டியன் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர். ‘அசுரவதம்’ படத்தில் சசிகுமாரு க்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்கின்றார்.
அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களின் முன்னர் இப் படத்தின் ரீசரை இயக்குனர் கவுதம் மேனன் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்ததாக இதன் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளார். இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ஆம் திகதி இப்படம் வெளியிடப்படவுள்ளது.
Spread the love