குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. சமூக ஊடகங்கள் மீதான தடையானது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையிலானது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுத் தொடர்பாடலுக்கும் தொழில்சார் தேவைகளுக்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சட்டத்தை மீறுவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் இணையத்தில் இனக் குரோத, மதக் குரோத செயற்பாடுகள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவங்கள் நடந்து முடிந்ததன் பின்னர் இவ்வாறு சமூக ஊடகங்களை முடக்குவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.