எயர் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு அதில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எயர் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கினை இன்றையதினம் சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த இணையத்திருடர்கள் அதில் துருக்கி எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான படங்களை பதிவு செய்ததுடன் அனைத்து எயர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் இன்று முதல் துருக்கி எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வோம் எனவும் பதிவு செய்துள்ளனர்.
துருக்கியை சேர்ந்த தீவரவாதிகளால் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் கருதப்படும் அதேவேளை டுவிட்டர் கணக்கை முடக்கிய நபர்கள் அதிலிருந்து சில முக்கிய தகவல்களை திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் இணையதளம் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது