129
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்கும் வரையில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் 17ம் திகதி நாடு திரும்ப உள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love