பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ள போதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று பதினாறாவது நாளாகவும் போராட்டம் இடம்பெறுகின்ற நிலையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக, பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று மாலை அறிவித்திருந்தது.
குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பணிக்கு திரும்ப போவதில்லை என்று பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்