புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் பாதிக்கப்படும் அதேநேரம் கேட்கும் திறனும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுமார் 50 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக காணப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20 லிருந்து 60 சதவீதம் வரை பாதிக்கும் எனவும் ஒலி மாசுவினால் ஏற்படுவதை விட புகைப்பழக்கத்தினால் கேட்கும் திறனுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.