குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகள் கிடையாது என இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்தைய மருத்துவ முறைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து மாத்திரைகள் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் சில வகை மருந்துகளின் பக்க விளைவாக குழந்தை பாக்கியம் வரையறுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்ற போதிலும் நேரடியாக மலட்டுத்தன்மையை உண்டு பண்ணும் வகையிலான மருந்து மாத்திரைகள் எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனமும் இதேவிதமான ஒர் கருத்தை வெளியிட்டிருந்தது.
அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து மாத்திரைகளை உணவில் கலந்து விநியோகம் செய்வதாகக் கூறி, ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
No prob folks in Sri Lanka. Come on concentrate your focus on increasing your own community population level ya. Hence keep that in mind there is no more avenue for any Jobs in our country if your all kids grow up. In fact I am a Graduate in this Sri Lanka Job less though qualified from BBA management discipline.