179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக அர்ஜூன் மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் மகேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டிருந்த போதும் அர்ஜூன் மகேந்திரன் இதுவரையில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
1 comment
At last. Sri Lankan state place this order towards the former central bank governor general. Who knows where he is???