குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனைகள் காணப்படுவதாக பல முறைபாடுகள் கிடைக்க பெற்று உள்ளனனால் வயதானவர்கள் , மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறியதாகவும் இனி அவ்வாறு உச்ச தொனியில் ஒலிபெருக்கி பாவனை இருந்தால் அது தொடர்பில் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளதாகவும் அவர் என தெரிவித்தார்.