குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 20 மில்லயன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(15) காலை 11.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த அமைச்சின் நிதி ஒது்க்கீட்டில் தேசிய நல்லிணக்க செயலணியின் ஒழுங்கு படுத்தலில் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானமூர்த்தி, பா ம உ சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது137 மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளும், 2 மீனவர்களிற்கு மீன்பிடி வள்ளம் மற்றும் மீன்பிடி வலைகள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.