தமிழக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நinபெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டநிலையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.