உலகம் முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்களின் குடிதண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவது புதிய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓஆர்பி மீடியா (ORB Media ) என்னும் ஊடக அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 250 பிரபலமான நிறுவனங்களின் குடிதண்ணீர் போத்தல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவில் பிரபல குடிதண்ணீர் போத்தல் நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறிப்பட்டது.
சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தாங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களை சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஆய்வினை மேற்கொள்ளவில்லை எனவும் சமூகத்தில் பிளாஸ்டிக் ஒரு பரவலான பொருளாக மாறியுள்ளது என்பதனை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக ஆராய்ச்சியை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.